மோகனூர் அருகேபணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Update:2023-08-06 00:15 IST

மோகனூர்

மோகனூர் அருகே உள்ள மேலப்பேட்ட பாளையம், காவிரி ஆற்று பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். அப்போது காவிரி ஆற்றின் ஒரு பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மேலப்பேட்டபாளையம் கறிக்கடை சரவணன் (வயது 40), வெல்டிங் வேலை செய்யும் பாலு (42), தீர்த்தாம்பாளையம் அருகில் உள்ள மோளக்கவுண்டனூர் டிரைவர் ஜெயவேல் (47), மணப்பள்ளியை சேர்ந்த கறிக்கடை போவர் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த சீட்டு கட்டு, ரூ.1,650 பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்