பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Update: 2023-08-02 20:30 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சூதாட்டம் நடைபெறுவது உறுதியானது.

இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட வடுகபாளையத்தை சேர்ந்த வஞ்சிமுத்து (வயது 38), கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கண்ணன் (48), உக்கடத்தை சேர்ந்த தேவதாஸ் (48), பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்த சண்முகம் (55) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.26 ஆயிரத்து 280 பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்