சூதாடிய 4 பேர் கைது

போடி அருகே சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-09 19:00 GMT

போடி தாலுகா போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது போடி அருகே உள்ள நாகலாபுரம் மயானம் அருகே 4 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் நாகலாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 31), கோபி (26), ராஜ்குமார் (36), சுஜீத் (28) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்