பிளாஸ்டிக் ஒயரை எரித்த 4 பேர் கைது
கடையம் அருகே பிளாஸ்டிக் ஒயரை எரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடையம்:
கடையம் அருகே கரும்பனூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னு திரவியம். இவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். பழைய கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் உதிரிபாகங்களை உடைத்து மறுசுழற்சிக்கு அனுப்பி வியாபாரம் செய்து வருகிறார். மேலும் அருகில் உள்ள இரும்பு கடைகளில் பழைய பிளாஸ்டிக் ஒயர்களை வாங்கி இரவு நேரங்களில் தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொன்னுதிரவியம், அவரது மகன் மகாராஜன், அங்கு வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் உமாசங்கர், ராகுல் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.