தள்ளுவண்டி கடைக்காரரை தாக்கிய 4 பேர் கைது

தள்ளுவண்டி கடைக்காரரை தாக்கிய 4 பேர் கைது

Update: 2022-09-14 15:18 GMT

கணபதி

கோவை கணபதியை அடுத்த காந்தி மாநகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது55). இவர் அங்குள்ள மைதானம் அருகே தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ராமச்சந்திரன் வழக்கம்போல வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். உதவிக்கு அவரது மகன் பிரதீப் உடன் இருந்தார். அப்போது கடைக்கு வந்த 4 வாலிபர்கள் வந்து சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ராமச்சந்திரனிடம் தகராறு செய்தனர்.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி அங்கு இருந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து ராமச்சந்திரனை தாக்கினர். தடுக்க முயன்ற அவரது மகன் பிரதீப்பையும் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் கோவையில் தங்கி வேலை பார்க்கும் நெல்லை மாவட்டம் தம்பிகோட்டையை சேர்ந்த பிரகாஷ் (27), தொண்டாமுத்தூர் அர்ஜூன் நகரை சேர்ந்த ராஜசேகர் (44), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சந்திரன் (29), திருவாடானையை சேர்ந்த சரவணகுமார் (42) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்