விவசாயியை தாக்கிய என்ஜினீயர் உள்பட 4 பேர் கைது
விவசாயியை தாக்கிய என்ஜினீயர் உள்பட 4 பேர் கைது
மோகனூர்:
மோகனூர் அருகே உள்ள லத்துவாடியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 51). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு என்.புதுப்பட்டி மதுக்கடை அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்களை 4 பேர் மிரட்டி கொண்டிருந்தனர். அப்போது அவர்களை ஏன் மிரட்டுகின்றீர்கள் என பரமசிவம் கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் பரமசிவத்தை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பரமசிவம் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் வழக்குப்பதிவு செய்து எம்.பி.எட். பட்டதாரியான கார்த்திக் (26), துளசி நகரை சேர்ந்த என்ஜினீயர் பிரகாசம் (30), கொசவம்பட்டியை சேர்ந்த பி.காம் பட்டதாரிகள் மணிகண்டன், சஞ்சய் (21) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.