வீடுகளை இடிக்க முயற்சி செய்வதை நிறுத்தக்கோரி 3-வது நாளாக போராட்டம்

திருவண்ணாமலை அருகே வீடுகளை இடிக்க முயற்சி செய்வதை நிறுத்தக்கோரி 3-வது நாளாக மடியேந்தி பிச்சை எடுத்து போராட்டம் நடந்தது.

Update: 2023-08-31 15:12 GMT

திருவண்ணாமலை தாலுகா சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் இந்த பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சோ.கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் வீடுகளை இடிக்க முயற்சி செய்வதை நிறுத்தக்கோரி கடந்த 29-ந் தேதி முதல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் இப்போராட்டம் நடைபெற்றது.

அப்போது பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் மடியேந்தி பிச்சை எடுத்து நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் வீடுகள் இடிக்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்