தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3,993 பேர் விண்ணப்பம்
அரியலூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3,993 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்
தமிழக அரசின் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், செந்துறை ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 64 இடைநிலை ஆசிரியர்கள், 41 பட்டதாரி ஆசிரியர்கள், 58 முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 163 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நியமனம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து கடந்த 4-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த கல்வி மாவட்ட அலுவலர்கள் மூலமாகவும், நேரிலும், இணையதள முகவரிகள் மூலமாகவும் பெறப்பட்டன.
3,993 பேர் விண்ணப்பம்
அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 64 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 1,423 பேரும், 41 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 1,441 பேரும், 58 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 1,129 பேரும் என மொத்தம் 163 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3,993 பேர் விண்ணப்பித்துள்ளனர்.