அரியலூர் மாவட்டத்தில் 39 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
அரியலூர் மாவட்டத்தில் 39 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
அரியலூர் மாவட்டத்தில் 88 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 39 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
அரியலூர் மாவட்ட சிறப்பு மாதிரி பள்ளி, கோவிந்தபுரம், கீழக்கொளத்தூர், த.கீழவெளி, இரும்புலிக்குறிச்சி, கீழக்காவட்டாங்குறிச்சி, அய்யூர், இடையக்குறிச்சி, இலந்தைக்கூடம், மருதூர், ஸ்ரீபுரந்தான் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், வெத்தியார்வெட்டு அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்னூர் அன்னை லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நடுவலூர் பாரதமாதா மேல்நிலைப்பள்ளி, வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குழுமூர் புனித பிலோமினாள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
சுயநிதி பள்ளிகளில் செந்துறை அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, தழுதாழைமேடு இந்திரா பப்ளிக் மேல்நிலைப்பள்ளி, நாகமங்கலம் பாரிவள்ளல் மேல்நிலைப்பள்ளி, ராயம்புரம் நாளந்தா மேல்நிலைப்பள்ளி, தத்தனூர் மீனாட்சி ராமசாமி மேல்நிலைப்பள்ளி, பாப்பாக்குடி எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, துளார் கலைமகள் மேல்நிலைப்பள்ளி, நல்லாம்பாளையம் வெற்றி விநாயகா மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில் அரியலூர் அரசு நகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீழப்பழுவூர் சுவாமி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உடையார்பாளையம் நவ்பால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குழவடையான் கோகிலாம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செந்துறை புனித தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆலத்தியூர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிமடம் ஸ்ரீ சவுபாக்கியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
இந்த பள்ளிகளில் அரசு பள்ளிகள் 11, அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி 1, அரசு உதவி பெறும் பள்ளிகள் 6, சுயநிதி பள்ளிகள் 8, மெட்ரிக் பள்ளிகள் 13 ஆகியவை அடங்கும்.