சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 380 பேர் கைது

அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினர் 380 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-01 18:12 GMT

பா.ஜனதா மகளிர் அணி சார்பில் சென்னையில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்தும், அவரை விடுவிக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் பா.ஜனதாவினர் மறியலில் ஈடுபட்டனர்.

அதன்படி திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜனதாவினர் சாலையில் அமர்ந்து அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்து. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பழனி பஸ்நிலையம் மயில் ரவுண்டானா அருகே கிழக்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் பா.ஜ.க.வினர் மறியலில் ஈடுபட்ட 127 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் கொடைக்கானல், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம் உள்பட மொத்தம் 9 இடங்களில் பா.ஜனதாவினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 380 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்