மங்களபுரம் பகுதியில் 38 மில்லிமீட்டர் மழைபதிவு

மங்களபுரம் பகுதியில் 38 மில்லிமீட்டர் மழைபதிவாகி உள்ளது.

Update: 2022-07-27 19:33 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக மங்களபுரம் பகுதியில் 38 மில்லி மீட்டர் மழை பெய்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு விவரம் மில்லி.மீட்டரில் வருமாறு:-

சேந்தமங்கலம்-36, நாமக்கல்-20, கொல்லிமலை-20, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-16, ராசிபுரம்-13, மோகனூர்-10, எருமப்பட்டி-10, புதுச்சத்திரம்-9, பரமத்திவேலூர்-4, குமாரபாளையம்-3, திருச்செங்கோடு-1.

மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்