மதுரை நகரில் ஒரே நாளில் ஆயுதங்களுடன் சுற்றிய 38 ரவுடிகள் கைது
மதுரை நகரில் ஒரே நாளில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 38 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் பல்வேறு இடங்களில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்து அடிக்கடி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் பிடித்து கைது செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் நகர் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தெப்பக்குளம் போலீசார் என்.எம்.ஆர். ரோட்டிலும், தெற்குவாசல் போலீசார் கிருமால்நிதிரோட்டிலும், ஜெய்ஹிந்த்புரம் போலிசார் சுந்தர்ராஜபுரம் பகுதியிலும், அவனியாபுரம், கரிமேடு, செல்லூர், புதூர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றபோது ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 38 ரவுடிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி, மிளகாய் பொடி, கயிறு போன்ற ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.