3,709 பேர் குரூப்-1 தேர்வை எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் 23 மையங்களில் நடந்த குரூப்-1 தேர்வை 3,709 பேர் எழுதினார்கள். தேர்வு மையங்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-11-19 11:26 GMT

வேலூர் மாவட்டத்தில் 23 மையங்களில் நடந்த குரூப்-1 தேர்வை 3,709 பேர் எழுதினார்கள். தேர்வு மையங்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

குரூப்-1 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் (டி.என்.பி.எஸ்.சி.) உதவி கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், வனபாதுகாப்பு உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 6,213 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்காக வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி, ஹோலிகிராஸ் பள்ளி, சாந்திநிகேதன் பள்ளி, காட்பாடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி உள்பட மாவட்டம் முழுவதும் 23 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. தேர்வர்கள் சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், எலக்ட்ரானிக்,மின்சாதன பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

3,709 பேர் எழுதினர்

குரூப்-1 தேர்வு எழுத விண்ணப்பித்த 6,213 பேரில் 3,709 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். 2,504 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி உள்பட பல்வேறு தேர்வு மையங்களில் நடந்த தேர்வை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேர்வு மையங்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையத்தில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்