ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 37 பேர் கைது
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
ரெயில் நிலையத்தில் மறியல்
இதேபோல, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ரயில் நிலையம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அதன்படி நேற்று மதியம் 12 மணி அளவில் மயிலாடுதுறை ரயில் நிலையம் வழியாக செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க மாணவர் சங்கத்தினர் ரெயில் நிலையம் நோக்கி வந்தனர்.
37 பேர் கைது
அவர்களை ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவா்களில் சிலர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து ஓடிச்சென்று ரெயில் தண்டவாளத்தில் படுத்தனர். இதனைக் கண்ட போலீசார் அவர்களையும் கைது செய்தனர்.மயிலாடுதுறையில், ரெயிைல மறிக்க முயன்றதாக 11 பெண்கள் உள்பட 37 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.