36 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

வேலூர் மாநகராட்சி பகுதியில் 36 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-10-19 19:39 GMT

வேலூர் நேதாஜி மார்க்கெட் மற்றும் பூக்கடைகளில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள், பூக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க மற்றும் விற்பனைக்காக பிளாஸ்டிக் பைகள் வைத்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன. 35 கடைகளில் இருந்து 25 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோன்று 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட வேலப்பாடி, குட்டைமேடு பகுதியில் உள்ள கடைகளில் சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது 42 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 11 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அக்கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.7,500 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்