அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 357 பேர் கைது

அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 357 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-25 19:43 GMT

மலைக்கோட்டை, ஜூன்.26-

திருச்சியில் பஸ்சை கடத்திய வழக்கில் சிவா எம்.பி.யின் மகனும், பா.ஜ.க. மாநில ஓ.பி.சி. பிரிவு பொதுச்செயலாளருமான சூர்யா சிவா கைது செய்யப்பட்டார். இதைகண்டித்தும், அதற்கு அமைச்சரின் தூண்டுதல் தான் காரணம் என்று கூறியும், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் வி.என்.நகரில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக நேற்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பா.ஜ.க.வினர் காமராஜர் சிலையில் இருந்து புறப்பட்டு சென்றனர். அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படாமல் இருப்பதற்காக மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் அன்பு, ஸ்ரீதேவி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் அமைச்சரின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி 43 பெண்கள் உள்பட 357 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதமாகி தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்டவர்களை வேனில் ஏற்றி அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்