ஒரு பணியிடத்துக்கு 351 பேர் போட்டி

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 351 பேர் குவிந்தனர்.

Update: 2022-12-20 16:26 GMT

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உதவியாளர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இந்த பணியிடத்தை நிரப்புவதற்கான நேர்காணல் நேற்று நடந்தது. இதற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி முருகன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உதயகுமார், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காலிப்பணியிடத்தில் சேருவதற்கு இளைஞர், இளம்பெண்கள் மத்தியில் போட்டாபோட்டி ஏற்பட்டது. அதாவது ஒரு பணியிடத்துக்கு 9 பேர் குவிந்தால் பராவாயில்லை. 90 பேர் என்றாலும் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நேர்காணலுக்கு வந்தவர்களின் எண்ணிக்கையோ 351 பேர். இதனால் நேர்காணலை நடத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் முழுவதிலும் இளைஞர்கள், இளம்பெண்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று நேர்காணலில் பங்கேற்றனர். உதவியாளர் பணிக்கான கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. ஆனால் நேர்காணலில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்