3,500 டன் அரிசி நெல்லை வந்தது
தெலுங்கானாவில் இருந்து ரெயில் மூலம் 3,500 டன் அரிசி நெல்லை வந்தது.
தெலுங்கானாவில் இருந்து சரக்கு ரெயிலில் 57 பெட்டிகளில் சுமார் 3 ஆயிரத்து 500 டன் அரிசி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் நெல்லை சிவந்திபட்டி அருகே முத்தூரில் உள்ள குடோனுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த அரிசி மூட்டைகள் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.