ஒரே நாளில் 3,500 நெல் மூட்டைகள் விற்பனைக்கு குவிந்தது

அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 3,500 நெல் மூட்டைகள் விற்பனைக்கு குவிந்தது.

Update: 2023-07-07 17:07 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அம்மூர், வேலம், கல்மேல்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளையும் நெல் மற்றும் பல்வேறு தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அதன்படி நேற்று அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 3,500 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது.

சோனா நெல் ரகம் அதிகபட்சமாக ரூ.2049-க்கு விற்பனையானது. அதேபோன்று கோ 51 ரகம் ரூ.1,100 முதல் ரூ.1897 வரையிலும், ஏ.டி. 37 குண்டு ரகம் ரூ.1060 முதல் ரூ.1596 வரையும், சோனா ரகம் ரூ.1601 முதல் ரூ.2049 வரையும் விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்