2 நாட்களில் 35 ரவுடிகள் கைது

நாகை மாவட்டத்தில் 2 நாட்களில் 35 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-11 18:45 GMT

தமிழகத்தில் சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன் பேரில் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில் போலீசார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட முயன்ற 35 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்