நாய் கடித்து 35 ஆடுகள் சாவு
திசையன்விளை அருகே நாய் கடித்து 35 ஆடுகள் இறந்தன.;
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள முதுமொத்தன்மொழியை சேர்ந்தவர் முருகன் (வயது 46). இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து மேய்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பெட்டைகுளத்தில் உள்ள மந்தையில் 150 ஆடுகளை அடைத்துவிட்டு இரவு தங்குவதற்காக அங்கு வந்துள்ளார். அப்போது அங்கு 35 ஆடுகள் கழுத்தில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்தது. மேலும் பல ஆடுகள் ரத்தக்காயத்துடன் உயிருக்கு போராடிகொண்டு இருந்தது. அந்த பகுதியில் உள்ள காட்டு நாய்கள் ஆடுகளை கடித்துக் கொன்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து முருகன், திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.