டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் 35 பேர் கைது

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் 35 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-02-24 09:22 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டேரி கிராமத்திற்கு செல்லும் ரெயில்வே தண்டவாள சாலை அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ.க. சிறுபான்மை அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒட்டேரி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே நடைபெற்றது. போராட்டத்திற்கு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. சிறுபான்மை அணி மாவட்ட தலைவரும், வண்டலூர் ஊராட்சி மன்ற உறுப்பினருமான டேனியல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி ஜி.சுகுமார், உசேன் பாய், ஒன்றிய தலைவர் கிருஷ்ணராஜா சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு செயலாளர் நடராஜன் கலந்து கொண்டு தமிழக அரசு உடனடியாக பொதுமக்களுக்கும், ரெயில் பயணிகளுக்கும் இடையூறாக உள்ள ஓட்டேரி டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கண்டண உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினர் அனைவரும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய நிர்வாகிகள் ரத்தினமங்கலம் டில்லிகுமார், வேங்கடமங்கலம் ராமதாஸ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடையை முற்றுகையயிட சென்ற அவர்களை உதவி போலீஸ் கமிஷனர் மற்றும் போலீசார்தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பா.ஜ.க.வினர் 35 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி வண்டலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இது குறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்