பூந்தமல்லியில் கைதான ரவுடியிடம் பறிமுதலான 34 நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர்

பூந்தமல்லியில் கைதான ரவுடி மற்றும் கூட்டாளிகளிடம் பறிமுதலான 34 நாட்டு வெடிகுண்டுகளை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் வெடிக்க வைத்து செயலிழக்க செய்தனர்.

Update: 2022-12-09 23:46 GMT

கொடுங்கையூர்,

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ் (வயது 40). பிரபல ரவுடியான இவரை, கோர்ட்டு பிடிவாரண்டின்பேரில் புளியந்தோப்பு போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி பூந்தமல்லியில் காரில் சென்ற ரவுடி வெள்ளை பிரகாசை, புளியந்தோப்பு தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து கை துப்பாக்கி, தோட்டாக்கள், நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பட்டாக்கத்திகள், சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர். ேமலும் அவரது கூட்டாளிகளான விக்ரமாதித்தன் (37), அருண் (26), பிரதீப் (27), பிரசாந்த் (27) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் வெள்ளை பிரகாஷ் உள்பட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

செயலிழக்க செய்தனர்

இவர்களிடம் இருந்து மொத்தம் 34 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. அவற்றை நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் குழு இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள், எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் தமிழ்வாணன், கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் முன்னிலையில் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பாதுகாப்புடன் வெடிக்க வைத்து செயல் இழக்க செய்தனர்.

ஒரே நேரத்தில் 34 நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததால் கொடுங்கையூர் குப்பை கிடக்கில் ஒரே புகை மண்டலமாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்