ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.33 ஆயிரம் திருட்டு

நெல்லை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.33 ஆயிரம் திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-01-25 20:59 GMT

பேட்டை:

நெல்லை அருகே உள்ள பேட்டை பங்களா தெருவை சேர்ந்தவர் இமாமுதீன் மனைவி பீமா (வயது 57). இவர் நேற்று டவுன் கோடீஸ்வரன்நகரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூ.33 ஆயிரத்தை எடுத்து பையில் வைத்துக்கொண்டு பேட்டைக்கு பஸ்சில் சென்றார். பேட்டை போலீஸ்நிலைய பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு சென்று பார்த்தபோது பையில் இருந்த பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பீமா பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணத்தை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்