மது விற்ற 33 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-28 20:06 GMT

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவ்வாறு சட்டவிரோதமாக பதுக்கிவைத்து மது விற்பனை செய்வோர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார்.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, வள்ளியூர், அம்பை, சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 21-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை சோதனை நடத்திய போலீசார், மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 33 பேரை கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து 814 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்