முதியவரிடம் ரூ.33½ லட்சம் மோசடி செய்தவர் கைது
இலங்கைக்கு அரிசி அனுப்புவதாக கூறி முதியவரிடம் ரூ.33½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கைக்கு அரிசி அனுப்புவதாக கூறி முதியவரிடம் ரூ.33½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.33½ லட்சம் மோசடி
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள ஆறுமுகம்பட்டியை சேர்ந்தவர் அருள்பாஸ்கர் (வயது 42). இவர் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறார்.
இவரிடம் நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த கந்தப்பன் (78) என்பவர், இலங்கைக்கு அரிசி அனுப்புவதற்காக ரூ.33 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். ஆனால் அரிசியை அனுப்பாமல் அருள் பாஸ்கர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
கைது
இதனையடுத்து அருள்பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கந்தப்பன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
கோர்ட்டு உத்தரவுப்படி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் அடிப்படையில் அருள் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.