அ.தி.மு.க. பிரமுகர் வீடு உள்பட 3 வீடுகளில் 32 பவுன் நகைகள் கொள்ளை

திண்டிவனம் அருகே ஒரே கிராமத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் வீடு உள்பட 3 வீடுகளில் 32 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

Update: 2023-07-13 18:45 GMT

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள தாதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் அ.தி.மு.க. ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த 14 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், 275 கிராம் வெள்ளிப்பொருட்களை காணவில்லை.

இதேபோல் பக்கத்து வீட்டை சேர்ந்த அங்கமுத்து என்பவரது வீட்டில் 16 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம், லட்சுமணன் என்பவரின் வீட்டில் 2 பவுன் நகை, சுரேஷ் என்பவரின் வீட்டில் 4 சேலைகள் மாயமாகி இருந்தன. ஒரே நாள் இரவில் அடு்த்தடுத்து 4 வீடுகளில் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்காக விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீடுகளை மோப்பமிட்ட அந்த நாய், அங்கிருந்து சிறிது தூரம் வரை ஓடிச் சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தில் 4 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்