கறம்பக்குடியில் 32 லிட்டர் சாராயம், 100 லிட்டர் ஊறல் பறிமுதல்

கறம்பக்குடியில் 32 லிட்டர் எரிசாராயம், 100 லிட்டர் ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2022-12-22 19:15 GMT

ரோந்து பணி

கறம்பக்குடி தாலுகா ரெகுநாதபுரம் பகுதியில் எரிசாராயம் விற்பதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் ஆலங்குடி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மணமல்லி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெகுநாதபுரம் அழகன்விடுதி பகுதியில் 3 பேர் எரிசாராயம் மற்றும் ஊறல் போட்டுக்கொண்டு இருந்தனர். இதையடுத்து, அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் அழகன்விடுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித்குமார் (வயது 26), மருதன்கோன்விடுதியை சேர்ந்த மாரிமுத்து (47), கந்தர்வகோட்டை தாலுகா பல்லவராயன்பட்டி கலியபெருமாள் மகன் முத்துக்குமார் (36) என்பது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 32 லிட்டர் எரிசாராயம், 100 லிட்டர் ஊறல் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்