பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 314 மனுக்கள் பெறப்பட்டன

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 314 மனுக்கள் பெறப்பட்டன

Update: 2023-08-07 18:45 GMT

கள்ளக்குறிச்சி

குறைகேட்பு கூட்டம்

மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 287 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டன.

முன்னதாக கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்று 27 பேரிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்துமுதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட நிதியில் அதி நவீன செயற்கை கால்கள் செய்து வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் 3 பேருக்கு நவீன செயற்கை கால்களை வழங்கினார்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர், சிறுமிகளின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர் ராஜலட்சுமி, உதவி ஆணையர்(கலால்) ராஜவேல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்