மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 314 பேர் மனு

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 314 பேர் மனு கொடுத்தனர்.;

Update: 2022-12-12 18:45 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அந்த வகையில் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 314 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் விரைந்து தீர்வு காணும்படி துறைசார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்