மது விற்ற 31 பேர் கைது

தஞ்சை மாவட்டத்தில் மதுவிற்ற 31 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-06-29 20:23 GMT

தஞ்சை மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் அந்தந்த சரகங்களில் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். இதில் தஞ்சை மாநகரம் முழுவதும் பாலாஜிநகரில் 2 இடங்களிலும், சாந்தபிள்ளைகேட், பழைய பஸ்நிலையம், தொம்பன்குடிசை, செங்கிப்பட்டி கடைதெரு, நடுக்காவேரி, பள்ளியக்ரஹாரம் பைபாஸ் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். அதில் 10 இடங்களில் சட்டவிரோதமாக மது விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை போலீசார் அம்மாப்பேட்டை கொக்கேரி, தாராசுரம், பட்டீஸ்வரம், திருமங்கலக்குடி, திருபுவனம், கும்பகோணம் நெல்லுக்கடை தெரு, இரும்பு தலை பஸ்நிறுத்தம், பாபநாசம், ஒரத்தநாட்டில் டாஸ்மாக் கடைகள் உள்ள சாலைகளில் 20 இடங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அதில், 17 இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையும், 3 இடத்தில் சாராயம் விற்ற 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் போலீஸ் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மதுவிற்ற 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




Tags:    

மேலும் செய்திகள்