ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழை புதுப்பிக்க 30-ந் தேதி கடைசி நாள்

ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழை புதுப்பிக்க 30-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-09-17 18:17 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் 2022-ம் ஆண்டிற்கான ஓய்வூதியர் நேர்காணல் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வீட்டு வாசலுக்கு வரும் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி சேவை மூலம் வாழ்நாள் சான்று சமர்ப்பித்தல். ஜீவன் பிரமாண் என்ற இணையதள சேவை மூலமாக பொதுசேவை, இ-சேவை மையங்கள் மூலமாக மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பித்தல். வாழ்நாள் சான்றிதழ் உரிய அலுவலரின் சான்று பெற்று தபால் மூலம் ஓய்வூதியம் பெறும் கருவூலத்திற்கு அனுப்புதல். ஓய்வூதியர்கள் தங்களின் செல்போன் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து முகப்பதிவு மூலம் வீட்டிலிருந்தபடியே வருடாந்திர நேர்காணல் செய்து கொள்ளலாம். மாவட்டக்கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேரில் சென்று நேர்காணல் செய்துகொள்ளலாம். மேலும், புதுக்கோட்டை மாவட்ட ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதியத்தை புதுப்பித்து கொள்வதற்கு வருகிற 30-ந் தேதி கடைசி நாளாகும். எனவே, இம்மாவட்ட ஓய்வூதியர்கள் மேற்காணும் முறைகளில் தங்களது ஓய்வூதிய நேர்காணலை வருகிற 30-ந் தேதிக்குள் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேர்காணலுக்கான ஆவணங்கள் ஓய்வூதிய புத்தகம், ஆதார் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் மற்றும் செல்போன் எண் ஆகியவை ஆகும். 30-ந் தேதிக்குள் புதுப்பிக்க தவறினால் தொடர்ந்து ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கிற்கு ஓய்வூதியம் அனுப்ப இயலாத நிலை ஏற்படும் என்று கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்