கோவில்பட்டியில் 306 பெண்கள் பால் குட ஊர்வலம்

கார்த்திகை சோமவாரவிழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் 306 பெண்கள் பால் குட ஊர்வலம் நடந்தது.

Update: 2022-11-28 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி யோகீஸ்வரர் உறவின்முறை சங்கம் சார்பில் கார்த்திகை 2-வது சோமவார தரிசன விழா நேற்று நடந்தது. விழாவை யொட்டி பாரதிநகர் யோகீஸ்வரர் திருமண மண்டபம் முன்பிருந்து 306 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரை முன் செல்ல, செண்டை மேளம், ராஜமேளத்துடன், மாணவ- மாணவிகள் சிலம்பாட்டம் நிகழ்ச்சியுடன் புறப்பட்டு செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

அங்கு சுவாமிக்கு பால்அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள், தீபாரதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யோகேஸ்வரர் உறவின்முஹை சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் முன்னிலையில் நகரசபை தலைவர் கருணாநிதி, கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் உறவின் முறை சங்க துணைத் தலைவர்கள் செல்லத்துரை, மூக்கையா, செயலாளர் வெயிலு முத்து, பொருளாளர் திருச்செல்வம், துணை செயலாளர்கள் செல்லத்துரை, பாலமுருகன், சட்ட ஆலோசகர்கள் பழனி குமார், கே.பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்