காரில் கடத்தி வந்த 303 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
விராலிமலையில் காரில் கடத்தி வந்த 303 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கரூரை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
வாகன சோதனை
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் மற்றும் மது விற்பதாக பல்வேறு புகார் வந்தது.
அதன்பேரில் விராலிமலை சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் விராலிமலை-புதுக்கோட்டை சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
கைது
அப்போது கரூர் மாவட்டம் குளித்தலை வடசேரியை சேர்ந்த ராமையா மகன் ராஜலிங்கம் (வயது 19) என்பவர் குட்கா புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கார் மற்றும் ரூ.3 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள 303 கிலோ 606 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ராஜலிங்கத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.