நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 3,010 குடியிருப்புகள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 358.15 கோடி செலவில் புதிதாக 3,010 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 358.15 கோடி செலவில் புதிதாக 3,010 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த குடியிருப்புகளுக்கான 902 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.