சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 300 பேர் கைது

திருவாரூரில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-12 19:15 GMT

திருவாரூர்;

திருவாரூரில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்

பா.ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இந்தி மொழி திணிப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய அலுவலகம் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று திருவாரூரில் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது.

300 பேர் கைது

சாலை மறியல் போராட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினருமான பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 125 ண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்