300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கொல்லங்கோடு:
கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நித்திரவிளை போலீஸ்நிலைய தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் மற்றும் போலீசார் நேற்று மாலை மங்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தினர். ஆனால் காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனை செய்த போது 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. மேலும் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து காருடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.