பாதிரியார் வீட்டில் ரூ 12 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் நகைகள் தீருட்டு

பேரணாம்பட்டு அருகே பாதிரியார் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளன.

Update: 2022-07-25 16:42 GMT

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே பாதிரியார் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளன.

பாதிரியார்

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பேரணாம்பட்டை அடுத்த எம்.வி.குப்பம் - புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வில்சன் டேவிட் (வயது 55). இவர் கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவரது மனைவி இவாஞ்சலின் மின்னி (50), ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இன்று காலை ஆசிரியை இவாஞ்சலின் மின்னி வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். பாதிரியார் வில்சன் டேவிட், அவரது மகன் மீகா (22) ஆகியோர் காலை 11 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தனர்.

பின்னர் சில மணி நேரம் கழித்து மகன் மீகா, வீடு திரும்பினார். கேட்டை திறந்தபோது வீட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உள்ளே ெசன்றபோது அறையில் பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 3 நெக்லஸ்கள், 6 வளையல்கள், ஒரு ஆரம் உள்பட 30 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன.

போலீசார் விசாரணை

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு, சப்-இன்ஸ் பெக்டர் பிரபாகரன் மற்றும் மேல்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

வேலூர் கைரேகை மற்றும் தடவியல் நிபுணர் லலிதா சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலூரிலிருந்து மோப்ப நாய் சிம்பா வரவழைக்கப்பட்டது. திருட்டு நடந்த இடத்தையே மீண்டும், மீண்டும் சுற்றி வந்தது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

நகையை திருடிய மர்ம ஆசாமிகள் பீரோவில் இருந்த மற்ற துணிமணிகளை ஏதும் சிதறாமல் தங்க நகைகளை மட்டுமே நோட்ட மிட்டு திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சம் என கூறப்படுகிறது.

மர்மநபர்கள் பாதிரியார் வில்சன்டேவிட் வீட்டின் வெளிகேட் பூட்டை உடைக்காமல் சுவர் ஏறிக்குதித்து முன்பக்க மற்றும் பின்பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்று கைவரிசை காட்டியிருக்கலாம் என கருதப்படுகிறது.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்