கடலாடியில் 30-ந்தேதி மாட்டு வண்டி பந்தயம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கடலாடியில் 30-ந்தேதி மாட்டு வண்டி பந்தயம் நடக்கிறது. இதை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைக்கிறார்.

Update: 2023-05-26 18:45 GMT

சாயல்குடி,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கடலாடியில் 30-ந்தேதி மாட்டு வண்டி பந்தயம் நடக்கிறது. இதை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைக்கிறார்.

மாட்டு வண்டி பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வடக்கு ஒன்றிய கழகச்செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் ஏற்பாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. வருகிற 29-ந்தேதி கடலாடி வடக்கு ஒன்றியம் சார்பில் பொதுக்கூட்டமும் 30-ந்தேதி பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என மூன்று வகையான மாட்டுவண்டி பந்தயம் கடலாடியில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்று மாட்டுவண்டி பந்தயங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம வளர்ச்சி நல வாரிய துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைக்கிறார். நடுமாடு பந்தயத்தை ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தை முன்னாள் அமைச்சரும், மாநில தீர்மான குழு இணைச் செயலாளருமான சத்தியமூர்த்தி தொடங்கி வைக்கிறார்.

2 பவுன் தங்க நாணயம்

பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசாக 2 பவுன் தங்க நாணயம், 2-ம் பரிசு 12 கிராம் தங்க நாணயம், 3-ம் பரிசாக 8 கிராம் தங்க நாணயம், முதல் கொடி வாங்கும் மாட்டுக்கு 2 கிராம் தங்க நாணயம், சின்ன மாடு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசு 12 கிராம் தங்க நாணயம், 2-ம் பரிசு 8 கிராம் தங்க நாணயம், 3-ம் பரிசு 6 கிராம் தங்க நாணயம், முதல் கொடி வாங்கும் மாட்டுக்கு ஒரு கிராம் தங்க நாணயம், பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம், முதல் கொடி வாங்கும் மாட்டுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது.

பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5 ஆயிரம், முதல் கொடி வாங்கும் மாட்டுக்கு குத்துவிளக்கு என பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு தி.மு.க. கடலாடி செயலாளர் ராமசாமி வரவேற்கிறார். வடக்கு ஒன்றிய இளைஞரணி மாரிநாதன் நன்றி கூறுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கடலாடி தி.மு.க.வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் மற்றும் வடக்கு ஒன்றிய கிளைக் கழக சார்பு அணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்