வேனுடன் 30 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

வேனுடன் 30 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-10 19:33 GMT

விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காரியாபட்டி அருகே ஆவியூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தலா 30 கிலோ கொண்ட 30 மூடை ரேஷன் அரிசி இருந்தது. வேனுடன் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக மதுரை பனையூரை சேர்ந்த வேன் உரிமையாளர் பிரவீன் (வயது 22), மற்றும் வேனில் இருந்த சுமை தூக்கும் தொழிலாளிகள் பனையூர் அருண் (22), காமராஜர்புரத்தை சேர்ந்த விஜயபாண்டி (25) ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்