3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய கொண்டு வந்த வழக்கில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-10-18 19:52 GMT

விக்கிரமசிங்கபுரம்:

புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய கொண்டு வந்த வழக்கில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

புகையிலை பொருட்கள்

நெல்ைல மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் 309 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வாகனங்களில் கொண்டு வந்த தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரம் பகுதியை சேர்ந்த முகமது மைதீன் மகன் முகமது ஹாலித் (வயது 32), முகமது கனி மகன் அஜ்மீர் அலி (35), ஆழ்வார்குறிச்சி பள்ளிவாசல் வடக்கு தெருவை சேர்ந்த செய்யது மசூது மகன் முகமது தவுபிக் (21) ஆகியோரை விக்கிரமசிங்கபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

குண்டர் சட்டம்

இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனுக்கு பரிந்துரை செய்தார். அவர், கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.

இதையடுத்து 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.

இதையடுத்து 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான நகலை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் வழங்கினார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்