3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சேலத்தில் கஞ்சா விற்றதாக கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா பிறப்பித்தார்.

Update: 2022-09-08 20:37 GMT

சேலத்தில் கஞ்சா விற்றதாக கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா பிறப்பித்தார்.

கஞ்சா விற்பனை

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர்கள் மோகன்ராஜ் (வயது 25), காஜாமைதீன் (22). இவர்கள் இருவரும் கடந்த மாதம் 5-ந் தேதி கிச்சிப்பாளையம் காந்திநகர் சுடுகாடு அருகே கஞ்சா விற்றனர். அப்போது அவர்களை கிச்சிப்பாளையம் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணையில், மோகன்ராஜ், காஜாமைதீன் ஆகியோர் கஞ்சாவை நாமக்கல்லில் இருந்து வாங்கி வந்து சேலத்தில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதேபோல் கடந்த மாதம் 7-ந் தேதி அதே பகுதியில் கஞ்சா விற்றதாக களரம்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் (24) என்பவரை கிச்சிப்பாளையம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

குண்டர் சட்டத்தில் கைது

பொது சுகாதாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் மோகன்ராஜ், காஜாமைதீன், சண்முகம் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை பரிசீலித்து மோகன்ராஜ், காஜாமைதீன், சண்முகம் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா உத்தரவிட்டார். இதற்கான ஆணை மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் அதிகாரிகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்