கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர்கள் 3 பேர் கைது

கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-10 18:54 GMT

புதுக்கோட்டை விடுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் ஆலங் குடியில் இருந்து புதுக்கோட்டை விடுதியில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அம்புலி ஆற்று பாலத்தில் வந்த போது, ஆலங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த வெள்ளைச்சாமி (22), முருகன் மகன் கவுதம் (19), பாரதிதாசன் சாலையை சேர்ந்த கண்ணன் (30) ஆகிய 3 பேரும் சேர்ந்து ரமேசை வழிமறித்து கத்தியை காட்டி பணம்பறிக்க முயன்றனர். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்று ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளைச்சாமி உள்பட 3 பேரையும் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்