குண்டர் சட்டத்தில் 3 வாலிபர்கள் கைது

சிவகிரியில் குண்டர் சட்டத்தில் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-16 19:00 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே தேவிப்பட்டணம் கலைஞர் காலனியைச் சேர்ந்த செல்வக்குமார் (வயது 40). இவர் கடந்த ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவரை மர்மநபர்கள் வெட்டிக் ெகாலை செய்தனர்.

இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கொலை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தேவிப்பட்டணத்தை சேர்ந்த செல்வகுமார் (20), மதன்குமார் (21), காளிராஜ் (22) ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சிவகிரி போலீசார், உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்