மோட்டார்சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது

சிப்காட் பகுதியில் மோட்டார்சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-09 19:04 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் திருட்டு போனது. இந்த நிலையில் சீக்கராஜபுரம் கூட்ரோடு பகுதியில் நேற்று மாலை சிப்காட் போலீசார், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி மோட்டார்சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை நிறுத்தி விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் சோளிங்கர் தாலுகா புலிவலம் கிராமத்தை சேர்ந்த சிம்பு (வயது 22), சரத் (21), மற்றும் கவியரசன் (19) என்பதும், நண்பர்களான மூவரும் சேர்ந்து சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து, 2 நாட்களுக்கு முன்பு சீக்கராஜபுரம் பகுதியில் திருடிய பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்