பள்ளிக்கூடத்தில் திருடிய 3 வாலிபர்கள் கைது

தூத்துக்குடியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-25 19:00 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிக்கூடம்

தூத்துக்குடி 2-ம் கேட் பகுதியில் ஒரு தனியார் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த கம்ப்யூட்டர், ஸ்பீக்கர், மின்விசிறி, குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.43 ஆயிரத்து 300 என்று கூறப்படுகிறது.

இது குறித்து தலைமை ஆசிரியர் மெட்ரோ அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

விசாரணையில், தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மெஹபூஜான் (வயது 25), ராம்குமார் (23), தூத்துக்குடி செல்வநாயகபுரத்தை சேர்ந்த தேவராஜ் என்ற சாம் (22) ஆகியோர், பள்ளி தலைமை ஆசிரியரின் அறை கதவை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ், 3 பேரையும் கைது செய்தார். அவர்கள் திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மெஹபூஜான் மீது ஏற்கனவே 8 வழக்குகளும், ராம்குமார் மீது 6 வழக்குகளும், தேவராஜ் என்ற சாம் மீது 9 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்