கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-01 18:47 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருக்கோகர்ணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன் (வயது 25), சின்னையா (21), குணா (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவையும், ரூ.3 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்