கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

விருத்தாசலம், புதுப்பேட்டையில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-18 19:15 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிந்தனர். அப்போது விருத்தாசலம் வடக்கு காலனியை சேர்ந்த தங்கதுரை (வயது.23), கார்குடல் ரோட்டு தெருவை சேர்ந்த அருண் (23) ஆகியோர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 200 கிராம கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

புதுப்பேட்டை

இதேபோல், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரெட்டிக்குப்பம் முருகன் கோவில் தெருவின் அருகில் உள்ள சுடுகாடு பகுதியில் கஞ்சா மற்றும் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மணிகண்டன் (22) என்பவரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். பிடிபட்ட அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம், 25 கிராம் கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்