கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

சோளிங்கரில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-09-12 01:25 IST

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எசையனூர் மயான பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்க்ள மோகன்ராஜ், மோகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது போலீசாரை பார்த்தும் முட்புதரில் இருந்து தப்பி ஓட முயன்ற 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செயதனர். இதில் கஞ்சா விற்பனை செய்வது உறுதியானது. தொடர்ந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் அய்யனேரி பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 23), ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்கண்டமோட்டூர் பகுதியை சேர்ந்த சேகர் (24), வெங்கடேசன் (26) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்