என்ஜினீயரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது

என்ஜினீயரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-17 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டியில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் மதுபார் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஊட்டியை சேர்ந்த என்ஜினீயர் குணசேகரன், தனது நண்பருடன் மதுபாரில் இருந்தார். அப்போது அங்கு ஊட்டி மேரிஸ்ஹில் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சையது அல்தாப் (வயது 18), நிக்கோலஸ் ஒயிட் (18) ஆஸ்டின் ரூபேஷ் (19) உள்பட 5 பேர் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது சையது அல்தாப் உள்ளிட்ட வாலிபர்களுக்கும், குணசேகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து வாலிபர்கள் குணசேகரனிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் மதுபாரை விட்டு வெளியே வந்ததும் வாலிபர்கள், குணசேகரன் மற்றும் அவரது நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தகவல் அறிந்த ஊட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து சையது அல்தாப், நிக்கோலஸ் ஒயிட், ஆஸ்டின் ரூபேஸ் ஆகிய 3 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ஊட்டி மார்க்கெட்டில் இருந்து லோயர் பஜார் செல்லும் சாலையில் டீக்கடை உரிமையாளர் பிரபு என்பவரிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டதாக எச்.பி.எப். பகுதியை சேர்ந்த ஆகாஷ் (25), கவுதம் (24) உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்